Thursday, November 18, 2010

அஞ்சறைப்பெட்டி



சாலைகளில் வழிநெடுகிலும் விளம்பர நிறுவனத்தினர் லட்சகணக்கில் செலவு செய்து வைக்கும் விளம்பரபோர்டுகளை மாநகராட்சி அத்தனையும் அகற்றி விளம்பரத்துறையினரை பெரும் நஷ்டத்துக்குள்ளாக்கி வருகின்றது என்பது கண் கூடாக காணும் அவலம்.இதற்கு விளம்பர போர்டுகள் இருப்பதால் விபத்துகள் நடந்தேறி வருகின்றது என்று கூறுகின்றனர்.வழி நெடுகிலும் சுவர்களில் கண்களையும் கருத்தையும் கவரும் விதம் அழகிய படங்களை வரைந்து அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று சிலருக்கு லாபம் கொடுத்து இருக்கின்றார்களே.அந்த சித்திரங்களால் விபத்து நடக்காதா என்ன?இல்லை இனி சாலைகளில் விளம்பர போர்டுகள் நிறுவப்படாமலே இருந்து விடுமா?


தமிழ்நாட்டில்,குறிப்பாக சென்னையில் ஆள் கடத்தல் சம்பவம் நிறைய நடகின்றது.இளைஞர்களையும் கடத்திப்போய் கோடிக்கணக்கில் பேரம் பேசுகின்றனர்.சமீபத்தில் நடந்தேறிய ஒரு தெரிந்த குடும்பத்திற்கு நேர்ந்த அவலம் மிகவும் வருந்ததக்கது.குற்றவாளிகளை பிடித்து அதிகபட்ச தண்டணை கொடுத்தால்த்தான் இது போன்ற அவலங்கள் நடந்தேறுவது குறையும்.

தியாகராயநகரில் இருக்கும் மன்னார்ரெட்டி தெருவில் ஒரு டாஸ்மாக் கடை.வழிநெடுகிலும் கையில் பாட்டிலும்,கிளாஸுமாக குடிமக்கள் பண்ணும் அலப்பரை,சண்டை நிகழ்வுகள் சகிக்க முடியவில்லை. போததற்கு சுண்டல் வண்டிகளும்,பஜ்ஜி வண்டிகளும் தெருவையே அடைத்துக்கொண்டு அந்த பகுதில் பெண்களும்,சிறுவர்களும் நடந்து செல்லவே அச்சப்பட வேண்டிய சூழ்நிலை.அங்கு குடி இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குறியது.இந்த தெருவில்மட்டுமல்ல சென்னையின் அநேகப்பகுதியில் இந்த அவலம் நடந்தேறி வருகின்றது.இன்னொரு கொடுமை என்னவென்றால் மிக பிரபலமான ஒரு மாலில் இதே கடையைக்கண்டு அதிர்ந்தேன்.அரசாங்கம் லாபம் பெறும் நோக்கத்திற்காக பொது மக்கள் இத்தனை அவஸ்தைப்பட வேண்டுமா?எப்பொழுது மனசாட்சி உள்ள அரசியல் வாதிகள் பிறப்பார்கள்?

எங்கள் வீட்டருகே அதிகம் பிரபலமில்லாத ஒரு தேசிய மயமாகப்பட்ட வங்கியின் கிளை சமீபத்தில் திறந்தனர்.அதில் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டி வங்கிக்கு சென்றேன்.தேவையான சில proof கள் எடுத்து சென்றுஇருந்தாலும் introducer இல்லாமல் புதிதாக கணக்கு தொடங்க இயலாது என்றார்.எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாததை எடுத்து சொன்னேன்.ஆனால் வங்கியின் மேலாளர் "அதுதான் ரூல்ஸ்" என்று அழுத்தமாக கூறிவிட்டார்."யாரவது கிடைத்தால் மீண்டும் வருகிறேன்" என்று கூறி அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு திரும்பிய பொழுது பின்னால் இருந்து "மேடம் மேடம்.." என்ற குரல் கேட்டு திரும்பினேன்.ஒரு இளைஞர் "introducer கையெழுத்து வேண்டுமென்றால் நான் போட்டுகொடுக்கிறேன்.இதே பிராஞ்சில் நான் அக்கவுண்ட் வைத்துள்ளேன்" என்றார்.மனதில் அவநம்பிக்கையுடன் அவரை நான் பார்த்த பொழுது அடுத்த வார்த்தையில் அதிர்ந்து போனேன்."அதிகம் வேண்டாம் மேடம் ஒரு திரீ ஹண்ட்ரட் ருபீஸ் கொடுங்கள் போதும்" என்றாரே பார்க்கலாம்.கையில் இருந்த ஹேண்ட் பேக்கை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பதில் ஏதுவும் சொல்லாமல் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குள் மூச்சிரைக்க ஓடி வந்து விட்டேன்.எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்.

47 comments:

  1. விளம்பர போர்டு... நேற்று மதுரை கல்யாணத்துக்கு வச்ச போர்டை எவனாச்சும் தொடுவான்ங்கறீங்க :(

    சாதிகா அக்கா ஒரு பத்து லட்சத்தை எடுத்துக்கிட்டு அதே பேங்குக்கு அக்கவுண்ட் ஒப்பன் பண்ண போனிங்கன்னா introducer ம் வேண்டாம் யாரும் வேண்டாம். மேனேஜரே எல்லாத்தையும் செய்து தருவார். இதுதான் உலகம் :(

    ReplyDelete
  2. கவிசிவா..உங்களுக்கு ஒரு பெரிய சபாஷ்..நான் அதன் பிறகு பைசாவே லஞ்சம் கொடுக்காமல் ஒரு introducer ரெகமண்ட் பண்ண அங்கு கணக்கு ஆரம்பித்து விட்டேன்.கருத்துக்கு நன்றி கவி.

    ReplyDelete
  3. விளம்பர போர்டுகள் கேள்வி , நல்ல கேள்விதான் ..ஆனா அதை சரியான வரை முறை படுத்த வேண்டும் , இல்லையா.முக்கியமா தேர்தல் நேரத்துல, அரசியல் தலைவர்கள் விழா மாதிரி நேரத்துலையும் வைக்க அனுமதிக்க கூடாது .

    டாஸ்மாக் -> காந்தி இப்ப இருந்திருந்தா ஏன் சுதந்திரம் வாங்கி தந்தோமுன்னு நினைச்சி தற்கொலை பண்ணி இருப்பாரு

    பேங்க்-- நம்ம பணத்தை போட எதுக்கு introducerன்னு கேக்க வேண்டியதுதானே..!! கைமாத்தா ,கடனா கேக்க போனீங்க ..!!

    இன்னைக்கு அஞ்சறை பெட்டியில மிளகாய் பொடி அதிகம் :-))

    ReplyDelete
  4. *விளம்பரம்
    உங்களின் அஞ்சறைப் பெட்டி செய்திகளை படித்தேன், மிகவும் வருத்தமாக இருக்கின்றது சாலை ஓரங்களில் விளம்பரம் தட்டிகளை வைக்கக் கூடாது என்பது மாநகர ஆட்ச்சியின் ஆணை முன்பே இருக்கின்றது. விபத்துக்கள் அதிகமா நடக்கிறது என்று காரணம் சொன்னார்கள், அதுவும் நூற்றுக்கு நூறு உண்மை, அதேபோல எல்லா நாடுகளிலும் விளம்பர தட்டிகள் நகர்களில் வைத்துள்ளார்கள், சாலை ஓரங்களில் கிடையாது. நமது நாட்டில் விளம்பரத் தட்டிகளில் பெண்களும் ஆண்களும் கவர்ச்சியோடு டிஜிட்டல் பேனர்களில் ஜொலிப்பதால் ஓட்டுனர்களின் கவனம் அங்கு செல்கிறது.

    *ஆள் கடத்தல்

    ஆள் கடத்தல் கும்பலுக்கு விரிவாகத்தான் எழுதணும், விரைவில் எனது தளத்தில் இடம்பெறும்.

    *டாஸ் மார்க்

    கருப்பு பெட்ரோல் என்று இந்த டானிக்கை சொல்லலாம், அவ்வளவு வருமானம் எந்த ஒரு மூலதனம் இல்லாமல் உண்டாக்கும் அரு சுவை மருந்து. இதில் சேர்க்கப் படுவதோ அழுகிய பழங்களும்,மருத்தவமனை ஸ்ப்ரிட்டும்.இதைக் குடிப்பதற்கு குடி மகன்களுக்கு போட்டோ போட்டி.இதன்மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் ஆயிரம் கோடி என்றால், குடித்து சீரழிந்து போனக் குடும்பத்தினர் குடிகாரங்களுக்கு ஆஸ்ப்பத்திரி செலவிற்காக செலவழிப்பது ஐய்யாயிரம்கோடி.

    *வங்கி

    சட்டம் இவர்களை ஒன்னும் செய்யாது காரணம் ஊழல்கள் அதிகமாக புழங்கிற இடங்களில் பேங்க்குகளும் ஒன்று இவர்களுக்கு அந்நியன் மாடலில் வந்து தண்டனைக் கொடுத்தால்தான் திருந்துவார்கள்.

    அந்நியன் :2

    ReplyDelete
  5. நல்லா இருக்கு அஞ்சறைப் பெட்டி. இங்கு அமெரிக்காவில் சமீபத்தில் தேர்தல் நடந்திச்சு. அதற்கான விளம்பர தட்டிகள் தெருவெங்கும் வைத்திருந்தார்கள். இங்கு சுவர்களில் விளம்பரங்கள் ஒட்டக் கூடாது. நேற்று கடைக்கு போனபோது ஒரு பெண் எல்லா விளம்பர போர்டுகளையும் அகற்றிக் கொண்டு நின்றார்.

    ReplyDelete
  6. ரொம்பநாள் கழித்து அஞ்சறைப்பெட்டியை திறந்திருக்கிங்க..நல்ல தொகுப்புக்கா...கவிசிவா சொன்னதையே வழிமொழிகிறேன்...

    ReplyDelete
  7. ரொம்ப நாள் கழித்து இப்பத்தான் சென்னையைப் பார்க்கின்றீர்கள் போல. இது எல்லாம் சாதாரணம் என்பது போல மனதில் குற்ற உணர்வு கூட இல்லாமல் வாழ்வது இங்கு சகஜம். எல்லாம் பண மயம் ஆகிவிட்டது. மானுடம் செத்து விட்டது.

    ReplyDelete
  8. //நம்ம பணத்தை போட எதுக்கு introducerன்னு கேக்க வேண்டியதுதானே..!! கைமாத்தா ,கடனா கேக்க போனீங்க ..!!
    // அடடா..இந்த ஐடியா அப்ப எனக்கு வராமல் போய் விட்டதே!:-( கருத்துக்கு நன்றி ஜெய்லானி.

    ReplyDelete
  9. ஐயூப்..பின்னூட்டத்திலேயே சூப்பார அலசி துவைத்து காயப்போட்டு விட்டீர்கள் உங்கள் பாணியிலேயே.கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  10. கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

    ReplyDelete
  11. வானதி,கருத்துக்கு மிக்க நன்றி.விளம்பரத்தை அகற்றுவது தப்பில்லை.ஆனால் இன்னும் சில நாட்களிலேயே வேறு ரூபத்தில் விளம்பரங்கள் சாலை ஓரங்களில் மின்னும்.அதுதான் தவறு.

    ReplyDelete
  12. சுதாகர் சார்,நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கின்றீர்கள்.//இது எல்லாம் சாதாரணம் என்பது போல மனதில் குற்ற உணர்வு கூட இல்லாமல் வாழ்வது இங்கு சகஜம்//சென்னையில் மட்டுமல்ல,எல்லாஊரிலும் உண்டுதான்.கருத்துக்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  13. அஞ்சறைப்பெட்டியை திறந்தாச்சா?இனி தொடர்ந்து செய்தியை எதிர்பார்க்கலாம் தானே!

    ReplyDelete
  14. அக்கா, அனைத்து தேசிய மயமாககப்பட்ட வங்கிகளிலும் இந்த நடைமுறைதான். எனனக்கு திருமணமானப் புதிதில் என் மனைவிக்கு கணக்குத் துவங்க கஷ்டப்பட்டேன். ஆனால் ஒரு வகையில் இது நல்லதுதான்.

    ReplyDelete
  15. நல்லவேளை பணம் கொடுக்காமல் வந்தீங்களே.. நல்லது ஸாதிகா

    ReplyDelete
  16. இப்போ எல்லாம் சென்னையில் விளம்பர போர்டு.90 சதவிகிதம் குறைந்து போச்சி அனைத்து வங்கியிலும் அப்படி தான் அவர்களே ஆல் செட் பண்ணி தருவார்கள்

    ReplyDelete
  17. இன்றைக்கும் சென்னையில் ரொம்பவே அதிகம். கன் அசையும் நேர்த்தில் ஏமாற்றி விடுகிறார்கள்.
    இது எல்லா இடத்திலும் இருக்கு நிங்க சொல்வது சரியே.

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    இந்தியாவின் முக்கிய வருமானங்களில் முதலிடத்தில் உள்ளதே இந்த டாஸ்மாக் மூலம் வரும் பணம் தான் என்னும் போது கவலையா தான் இருக்கு!

    சென்னையில் ரொம்ப மோசம் தான். முக்குக்கு முக்கு இருக்கும். அதுவும் 15 ல இருந்து 20 வயசுல உள்ள சின்ன பசங்க கூட்டம் தான் அதிகம். என்ன செய்ய?

    நானும் அக்கவுண்ட் ஓபன் பண்ண ரொம்ப சிரமப்பட்டேன். ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணனும்னா முதலில் பணம் முக்கியம் இல்ல. ஆளை தான் தேடணும் போல :(

    ReplyDelete
  19. நல்ல கருத்துக்கள். என்ன செய்வது. இவைகளுடன் வாழப்பழகிவிட்டோம்.

    பேங்க் அக்கவுன்டைப்பொருத்து ஒரு கருத்து. பேங்க் அக்கவுன்டை வைத்து பல மோசடி வேலைகள் நடக்கின்றன. அதற்காகத்தான் அறிமுகம். யாருக்காவது நீங்கள் அறிமுகம் செய்வதாக இருந்தால் நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் செய்யுங்கள்.

    ReplyDelete
  20. எனக்கு கூட பேங்க் அக்கவுண்ட் ஓபன்
    பன்ணும்போது ரொம்ப சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டி வந்தது.
    எல்லா இடங்களிலும் இதுதானா நிலைமை?

    ReplyDelete
  21. விளம்பர போர்டுகள் முறைப்படுத்தப் பட வேண்டும்.

    //கண்களையும் கருத்தையும் கவரும் விதம் அழகிய படங்களை வரைந்து //

    அட, அருமையான படமா இருந்தாப் பரவால்லையே. கவர்ச்சியான, ஆபாசமானப் படங்களையும்ல வைக்கிறாங்க. முதல்ல அதக் கிழிச்சாப் போதும்.

    தெரிஞ்சவங்க வீட்டிலயே கடத்தலா? என்னா திகில் நியூஸெல்லாம் சொல்றீங்க? என்ன, எப்படி நடந்ததுன்னும் சொன்னா மத்தவங்களுக்கும் உதவுமே. (ஆளைச் சொல்ல வேணாம்)

    விதிகள் நியாயமா இருக்கலைன்னா இப்படித்தான் ஊழல் இருக்கும்னு ‘அக்கவுண்ட் புரோக்கர்’ மூலம் தெரியுது.

    டாஸ்மாக் - அதெல்லாம் ஒண்ணும் சொல்லக்கூடாது. அது தர்ற வருமானத்துலதான் அரசாங்கமே நடக்குது; அதையும் எடுக்கச் சொன்னா? அப்புறம் இலவசங்களையா நிறுத்த முடியும்? என்னா ஆள் நீங்க? ;-))))

    ReplyDelete
  22. விளம்பரப்படங்கள் பற்றி தெரில ஸாதிகாக்கா! பேங்க்களில் பெரும்பாலும் இதே நடைமுறைதானே..புதுசா இடம் மாறினால் சிரமம்தான்.

    இன்ட்ரொட்யூஸ் பண்ணித்தரேன்னு லஞ்சம் கேக்கறாங்களா??கலி முத்திப்போச்சு போங்க!:)

    ReplyDelete
  23. காரசாரமான ஆனால் அழுத்தமான‌ பதிவு ஸாதிகா!

    விளம்பர போர்டுகளைப்பற்றிய உங்கள் கருத்து சரியே! கண்ணை உறுத்தும் தரக்குறைவான போர்டுகளை வைக்காமல் இருந்தால் சரி!

    சிறு பிள்ளைகளைக் கடத்தும் விஷயத்தில் பெற்றோருக்கு பல மடங்கு விழிப்புணர்வும் கவனமும் இருத்தல்தான் மிக மிக அவசியம். நீங்க‌ள் சொல்வ‌துமாதிரி, மிக‌ அதிக‌ப்ப‌ட்ச‌ த‌ண்ட‌னையை கால‌ தாம‌த‌மின்றி உட‌னேயே வ‌ழ‌ங்க‌ வேண்டும்.
    இப்போதைக்கு ம‌ன‌சாட்சியுள்ள‌‌ த‌லைவ‌ர்க‌ளைக் காண்போமென்ற‌ ந‌ம்பிக்கை என‌க்கில்லை! அடுத்த‌ த‌லைமுறைக்காவ‌து அந்த‌‌ பாக்கிய‌ம் கிட்ட‌ட்டும்!

    ReplyDelete
  24. ஆசியா கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  25. அஹ்மத் இர்ஷாத் கருத்துக்கும்,வலைச்சராறிமுகத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  26. கருத்துக்கு நன்ரி சகோ எல் கே.//ஆனால் ஒரு வகையில் இது நல்லதுதான்// உண்மையான வரிகள்தான்.

    ReplyDelete
  27. //நல்லவேளை பணம் கொடுக்காமல் வந்தீங்களே.. நல்லது // பின்னே என்ன தேனம்மை?இப்படிப்பட்டவர்களை எல்லாம் ஆதரிப்பது என்பது அறிவீனம்.கூட ஒருவர் துணையாக வந்திருந்தால் ஆத்திரம் தீர நாலு வார்த்தை கேட்டு இருப்பேன்.

    ReplyDelete
  28. நல்லதொரு வலைப்பூ.பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  29. //அனைத்து வங்கியிலும் அப்படி தான் அவர்களே ஆல் செட் பண்ணி தருவார்கள்//எங்கே செட் பண்ணிகொடுக்கின்றர்கள்.ஆளாலுக்கு கேட்டு அப்புறமாக ஒருவரை பிடித்து பிறகுதான் அக்கவுண்ட் திறக்க முடிந்தது.கருத்துக்கு நன்றி சவுந்தர்.

    ReplyDelete
  30. nalla ezhuthi yullirgal parattugal
    polurdhayanithi

    ReplyDelete
  31. மத்த விசயம் போகட்டும் என்னாது இன்ட்ரடூசரா.. என்ன கதை இது ... நம்ம கஷ்ட பட்டு சம்பாதித்த பணத்த போட ஒரு அறிமுக வேற.. கிழிஞ்சுது போங்க... அதுவும் 300 ஆ.... வெளங்கிட்டாப்பல தான் :))

    விள‌ம்ப‌ர‌ங்க‌ள் க‌ண்ணை க‌வ‌ர்வ‌து என்ன‌வோ பிர‌ச்ச‌னை தான். என்ன‌ தான் க‌வ‌ன‌மா போனாலும் ஒரு நொடி போதுமே வாழ்க்கை திசை திருப்ப‌. இங்க‌ எல்லாம் தேர்த‌ல் விள‌ம்ப‌ர‌ம் வைச்சிடே போவாங்க‌ 1 ம‌ணி நேர‌த்தில‌ வ‌ந்து தூக்கி போட்டுட்டே ஒரு குரூப் போகும் :))

    க‌ட‌த்த‌ல் விச‌ய‌ம் இப்போ ரொம்ப‌ பேஷ‌ன் போல‌ இந்தியாவில்.. இந்தியா இந்த‌ விச‌ய‌த்தில் மெக்சிகோ கொல‌ம்பியாவை மிஞ்சுமா .. என்ன‌ செய்ய‌ எதிலயாவ‌து போட்டி போட‌லைன்னா :)) அது என்ன‌வோ தெரிய‌ல‌ ம‌க்க‌ளுக்கும் ஜாக்கிர‌தை உண‌ர்வு குறைந்து வ‌ருது இப்ப‌ல்லாம்

    ReplyDelete
  32. ஹும்ம்ம் அக்கறையான பதிவு, பகிர்வு.

    நாடு மட்டுமல்ல இதற்கு நம் மக்களும் கொஞ்சம் மாற வேண்டும்.

    ReplyDelete
  33. எல்லா விசயமுமே காரமாக இருக்கு. விடுங்க மேடம் இவங்க எப்பவுமே இப்படித்தான்.

    ReplyDelete
  34. அஞ்சறைப்பெட்டி அருமையான தொகுப்புகள்
    பாட்டிகளின் கையில் அஞ்சறைப்பெட்டி இருந்த காலத்தில்
    மருந்தே உணவாக
    உணவே மருந்தாக
    செய்யும் கலை நம்முடைய முன்னோர்களுக்கு கை வந்த கலை
    உங்களுடைய அஞ்சறைப்பெட்டியிலும்
    அந்த கலை கைகூடியிருக்கிறது
    பதிவெ சமூக அக்கறையாக
    சமூக அக்கறையே பதிவாக

    வாழ்த்துக்கள்
    சகோ

    ReplyDelete
  35. http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html
    தோழி உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்.பெற்று கொள்ளவும்.

    ReplyDelete
  36. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த அஞ்சறைப் பெட்டியில் சேர்க்கப்பட்ட சங்கதிகளும் சுவையும் சூப்பர்!!
    --------------
    ஸாதிகாக்கா நீங்கள் கொடுத்த பின்னூட்டத்தை முன் வைத்து ஒரு பதிவிட்டிருக்கிறேன் சகோ.

    http://mabdulkhader.blogspot.com/2010/11/blog-post_29.html

    ReplyDelete
  37. உங்கள் உற்சாகம் எனக்கு ஆர்வம் தருகிறது.வரதட்சணை பற்றி மேலும் உங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்.I like your all articles

    ReplyDelete
  38. பொறுமையாக டைப்பிட்டு கருத்து சொன்னமைக்கு நன்றி இலா

    ReplyDelete
  39. polurdhayanithi முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  40. //எல்லா விசயமுமே காரமாக இருக்கு. விடுங்க மேடம் இவங்க எப்பவுமே இப்படித்தான்.// அக்பர்தம்பி..இப்படி சொன்னால் எப்படி?கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  41. //நாடு மட்டுமல்ல இதற்கு நம் மக்களும் கொஞ்சம் மாற வேண்டும்.// சரியாக சொன்னீர்கள் சிங்கக்குட்டி.நன்றி.

    ReplyDelete
  42. விருதுக்கு மிக்கநன்றி ஆசியா.

    ReplyDelete
  43. சகோ ஹைதர் அலி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  44. கருத்துக்கு நன்றி அப்துல்காதர்.நான் கொடுத்த பின்னூட்டத்தைவைத்து போட்ட இடுகையை நீங்கள் இங்கு சொல்லுமுன்னரே படித்துவிட்டு உடன் பின்னூட்டியும் விட்டேன்.மிக்க சந்தோஷம்.நன்றி

    ReplyDelete
  45. வேண்டாம் வரதட்சணை.உங்கள ஆக்கங்களுக்கு கண்டிப்பாக எங்களது ஊக்கம் எப்பவும் உண்டு.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  46. விஜி கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete