Wednesday, December 1, 2010

கோடீஸ்வரர்களின் வங்கி.





கணக்கு ஆரம்பிக்க தனி மேலாளர்

காஃபி ஷாப்

ஆடை மாற்றும் நவீன அறைகள்

ஓய்வெடுக்கும் அறைகள்

கான்ஃப்ரன்ஸ் அறைகள்

24 மணி நேர பாதுகாப்புப்பெட்டக வசதி.

பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து எடுத்த நகைகளை அங்கேயே அலங்கார அறையில் அமர்ந்து அலங்கரித்து வைபவங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் அணிந்த நகைகளுடன் வங்கிக்கு திரும்பி பெட்டகத்தில் அணிந்திருக்கு நகைகளை கழற்றி வைக்கும் வசதி.

வாடிக்கையாளர்களை வீட்டுக்கே வந்து காரில் அழைத்து சென்று வேலை முடிந்ததும்
வீட்டிற்கு திரும்ப கொண்டு விடும் அளப்பறிய சேவை.

வரிகள், சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் தொடர்பான உதவிகள்.

விரும்பினால் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே நேரில் வந்து வங்கியின் சேவைகளை செய்து முடித்துத்தரும் ஊழியர்கள்.

வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி

வைஃபி வசதி

லிஸ்டைப்பார்த்து வியப்பாக உள்ளதா?வேறு எந்த நாட்டிலோ இந்த வங்கி அமையப்பெறவில்லை.நமது நாட்டிலேயேதான்.கசங்கிப்போன பத்து ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு கேஷ் கவுண்டரில் பணம் கட்ட கியூவில் நிற்கும் குப்பை பொறுக்கும் தொழிலாளியைக்கூட வாடிக்கையாளராக வைத்திருக்கும் அதே பாரதஸ்டேட் வங்கிதான் இப்படி ஒரு நட்சத்திரக்கிளையை ஹைதரபாத் நகரில் ஆரம்பித்து இருக்கின்றது.

கோடிகளில் புரள்பவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட இவ்வங்கி ஹைதராபாத் பஞ்ஞசரா ஹில்ஸ் பகுதியில் "கோஹினூர் பஞ்ஞசரா பிரிமியம் பேங்கிங் செண்டர்" என்ற பெயரில் 4000 சதுர அடி பரப்பளப்பளவில் இந்த ஒரே கிளைக்கு 80 லட்ச ரூபாயை செலவு செய்து நடச்சத்திர வங்கியை பணக்கற்றைகளில் நீச்சலடிக்கும் கோடீஸ்வரர்களுக்கு வலைவிரித்து இருக்கின்றது.குறிப்பாக ஹைதராபாத் நிஜாம் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர்களான பழைய இஸ்லாமிய நவாபுகளை சுண்டி இழுக்கும் வண்ணம் இக்கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற வைரத்தை தன் பெயராக கொண்ட இவ்வங்கி பிஸினஸ் செண்டர்களுக்கு மாணிக்கம்,மரகதம் - Ruby and Emerald என்றும்,காஃபி ஷாப்புக்கு முத்து - pearl என்றும்,கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு நீலக்கல் - Sapphire என்றும்,பாதுகாப்பு பெட்டக அறைக்கு கோமேதகம் - Topaz என்றும் நவரத்தினக்களின் பெயர்களை சூட்டி அலங்கரித்து இருக்கின்றது.


இந்த வங்கில் கணக்கு வைத்துக்கொள்ள தகுதியான அம்சங்கள்.
1.பெரும் கோடீஸ்வரர் ஆக இருக்க வேண்டும்.

2.கோடீஸ்வரர் தான் என்று வங்கியே தீர்மானித்து வங்கி நிர்வாகமே வாடிக்கையாளருக்கு கணக்கு தொடங்க அழைப்பு விடுக்க வேண்டும்.

3.கணக்கு வைத்துக்கொள்ள குறைந்த பட்சத்தொகை ஜஸ்ட் ஒரு கோடி மட்டுமே.

4.ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அமைச்சர் பதவியை போட்டு கொடுத்தாங்கன்னா ஒன்றென்ன ரெண்டு ,மூன்று அக்கவுண்டே இந்த வங்கியில் சுலபமாக திறந்து விடலாம்.



31 comments:

  1. எக்காவ், போன பதிவுல இண்ட்ரடியூஸர் வேணும்னு கேட்டாங்கன்னு கோவத்துல இந்த பாங்குல அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டீங்களா??

    உங்களை மாதிரி பெர்ர்ர்ர்ர்ர்ரியவங்ககூட பழக்கம் வச்சிருக்க வாய்ப்பு கிடைச்சது என் பாக்கியம்க்கா. நீங்கன்னா எனக்கு உசுருக்கா.

    ReplyDelete
  2. யம்மாடி ..ஹுசைனம்மா..நான் இந்த ஆட்டத்துக்கு வரலே.

    ReplyDelete
  3. ..ஒரு அமைச்சர் பதவியை போட்டு கொடுத்தாங்கன்னா ஒன்றென்ன ரெண்டு ,மூன்று அக்கவுண்டே இந்த வங்கியில் சுலபமாக திறந்து விடலாம்....

    ஏங்க அத்தனை கோடி ரூபாய் பணத்துக்கு 3 அக்கவுண்ட் தானா.. ஒரு கோடிக்கு ஒரு அக்கவுண்ட் என கணக்கு போட்டுக்குங்க தலை சுத்துது...

    எல்லா பணமும் எங்க இருக்குமோ...

    ReplyDelete
  4. தோழி நாம அந்த பக்கம் தலை வச்சி கூட படுக்க முடியாது போல.

    ReplyDelete
  5. ஆஹா...இப்படியும் ஒரு வாங்கியா...மலைப்பாக இருக்கின்றது...

    எப்படி எல்லாம் போய்க்கிட்டு இருக்கு...

    ReplyDelete
  6. நானும் அந்த பேங்குல அக்கவுண்ட் வச்சிருக்கேனே... :)).‌

    ReplyDelete
  7. //4.ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அமைச்சர் பதவியை போட்டு கொடுத்தாங்கன்னா ஒன்றென்ன ரெண்டு ,மூன்று அக்கவுண்டே இந்த வங்கியில் சுலபமாக திறந்து விடலாம்//

    அப்ப சுவிஸ் வங்கியின் கதி? :))

    ReplyDelete
  8. ஹுஸைனாம்மா சொன்னதே தான் ரிபீட்டு.
    போன பதிவிலேஎயே நினைத்தேன்,. அகவுண்ட்ட ஓப்பன் செய்துட்டு தான் பதிவு போடுவீங்கன்னு,
    ஹிஹி
    இப்போதைக்கு என் பிலாக் மாற்றி இருக்கேன் ஸாதிகா அக்கா அதுவும் சரி பட்டு வரல www.samaiyalattakaasam.blogspot.comஇதில் பதிவு தொடர்ந்துள்ளேன், மாற்றம் இருந்தால் ட்தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  9. //கோடிகளில் புரள்பவர்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட//

    நானும் எங்க தெரு கோடியில் போய் புரண்டு வரவா?? என்னத்தை சொல்ல? பணம் இருந்தா எல்லாமே கூடி வரும்.

    ReplyDelete
  10. இந்த பேங்கில் அக்கவுன்ட் வைத்திருக்கும் நபர்களின் பட்டியல் அனைத்தயும் சேகரித்து,கந்தசாமிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    ReplyDelete
  11. அதாங்க சங்கவி எல்லோருக்குமே தலை சுத்துது.கருத்துக்கு நன்றி சங்கவி

    ReplyDelete
  12. எனக்கும் மலைப்பாகத்தான் இருக்கு கீதாஆச்சல்.நன்றி கருத்திட்டமைக்கு.

    ReplyDelete
  13. //தோழி நாம அந்த பக்கம் தலை வச்சி கூட படுக்க முடியாது போல// பின்னே என்ன?இப்படி பதிவு போட மட்டும்தான் நாம்.நன்றி ஆசியா கருத்துக்கு.

    ReplyDelete
  14. //நானும் அந்த பேங்குல அக்கவுண்ட் வச்சிருக்கேனே... :)).‌//அட..அப்படீங்களா ஸ்டார்ஜன் தம்பி.நிஜமாலுமே சொல்லுறீங்களா?ரொம்ப சந்தோஷம் தம்பி.கருத்துக்கு நன்றி.இனி கைமாத்துக்கு தாரளாமாக நாளைய ராஜாவிடம் போகலாம்டோய்...

    ReplyDelete
  15. சுவிஸ் வங்கி மாதிரி ஒரு வெளிநாட்டு வங்கி கூடிய சீக்கிரம் நம்ம சென்னையிலேயே தொடங்கி விடுவாங்க ஆமினா.முதல் கிளை கோபாலபுரத்தில் தான் இருக்கும்.கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. //
    நானும் எங்க தெரு கோடியில் போய் புரண்டு வரவா// ஹா..ஹா..ரொம்பவே சிரிக்க வச்சிட்டீங்க வானதி.நன்றிப்பா!

    ReplyDelete
  17. ஜலி,நீங்களும் ஹுசைனம்மாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த வாறு வாறுகின்றீர்களே நியாயமா?

    ReplyDelete
  18. //இந்த பேங்கில் அக்கவுன்ட் வைத்திருக்கும் நபர்களின் பட்டியல் அனைத்தயும் சேகரித்து,கந்தசாமிக்கு அனுப்பி வைக்கப்படும்.// அந்நியன் அண்ணே எந்த கந்தசாமி ?கூழு வேர்க்கடலை வறுத்தகறி சுண்டகஞ்சி வடுமாங்கா சுட்டவடை நீர்மோரு பேட்ரிதண்ணி இளநீர் அப்டீன்னு மூச்சுவிடாம பாடுவாரே?அவரண்டையா?

    ReplyDelete
  19. உங்களுக்கு அமைச்சர் பதவி நான் வாங்கி தர்றேன்..மூனு என்ன முப்பது அக்கவுண்டே ஓபன் பண்ணிக்கங்க..

    ReplyDelete
  20. நானெல்லாம் அந்தபக்கம் தலை வச்சுக்கூட படுக்கமுடியாது போல..மக்களை எப்படிலாம் கவர்கிறாங்க பாருங்க..ம்ஹூம் வேற என்ன சொல்ல..

    ReplyDelete
  21. ஆஹா இப்படிக்கூட ஒரு வங்கியில் வசதிகளா?!!!!!!!!!1

    ReplyDelete
  22. ஹ்ம்ம்ம்ம்ம்....நமக்கும் தொலைத்தொடர்பில் ஒரு அமைச்சர் பதவியை போட்டு கொடுத்தாங்கன்னா ஒன்றென்ன ரெண்டு ,மூன்று அக்கவுண்டே இந்த வங்கியில் சுலபமாக திறந்து விடலாம்.


    .....அப்போ உங்களுக்கு assistant தேவைப்பட்டுச்சுனா சொல்லுங்க... ஹி,ஹி,ஹி,ஹி.....

    ReplyDelete
  23. supero super bank.

    My father in law name is Koteeswaran.

    So I think I will get definetely account ha ha ha..

    Everyone have black money....

    ReplyDelete
  24. //வஉங்களுக்கு அமைச்சர் பதவி நான் வாங்கி தர்றேன்..மூனு என்ன முப்பது அக்கவுண்டே ஓபன் பண்ணிக்கங்க.. // ஹரீஸ் என்ன தாராள மனசு.மிக்க நன்றி.

    ReplyDelete
  25. லக்ஷ்மி அம்மா,கருத்துக்கு நன்றியம்மா!

    ReplyDelete
  26. வெளிநாட்டு வங்கிகளுக்கு போட்டியாக இப்படிஎல்லாம் ஆரம்பித்து விடுகின்றனர்.இதுவும் நாட்டின் வளர்ச்சிதானே!மேனகா நன்றிப்பா!

    ReplyDelete
  27. //.....அப்போ உங்களுக்கு assistant தேவைப்பட்டுச்சுனா சொல்லுங்க... ஹி,ஹி,ஹி,ஹி..// சித்ரா மேடம் சகபதிவர் ஹரீஸ் வாங்கித்தருவதாக சொல்லி இருக்கிறார்.கிளிக் ஆச்சுன்னா சொல்லி அனுப்புறேன்.சரீங்களா?கருத்துக்கு ந்ன்றி.

    ReplyDelete
  28. ஹையா..விஜி மாமனார் பெயர் கோட்டீஸ்வரனா?அப்ப கண்டிப்பா கணக்கு ஓப்பன் பண்ணிவிடலாம்.நன்றிப்பா.

    ReplyDelete
  29. நான் கூட வெளி நாட்டில தான் இந்த வங்கி இருக்குனு நினைத்தேன் நம்ம இந்தியால தான் இருக்கா . நாம வெளில நின்னு வேடிக்கை பார்த்துட்டு வரலாம்..

    ReplyDelete
  30. http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_02.html
    தோழி,ஸாதிகா உங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.

    ReplyDelete
  31. //கணக்கு வைத்துக்கொள்ள குறைந்த பட்சத்தொகை ஜஸ்ட் ஒரு கோடி மட்டுமே.//

    இனி ஸ்விஸ் பக்கம் போக வேண்டி வராது .அங்கேதான் மினிமம் அக்கவுண்ட் வைக்க 50 லட்சம் ரூபாய் வேனும் .

    இந்தியா வள்ர்ந்து வருவதை பார்க்கும் போது அப்படி ஒன்னும் அதிகமா தெரியலை .

    இப்போது உள்ள ஒரு எம் எல் ஏ வை பிடித்தாலே பல் கோடி தேறும்

    ReplyDelete