Friday, December 3, 2010

இனிய கானங்கள்



பெண்கள் மனதை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு, அதுவும் பத்து பாட்டு பாடவேண்டுமென்ற தொடர் பதிவுக்கு தோழி ஆசியா அழைத்து இருக்கின்றார்.மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இப்பதிவை சற்று மெனக்கெட்டு பதிவு செய்கின்றேன்.ஆயிரம்தான் புதிய பாடல்கள் வந்து போனாலும் பழைய கானம் காலத்தால் அழியாதது.நாம் பிறக்கும் முன்னர் வெளிவந்த படத்தினைக்கூட ரசிக்கத்தூண்டும் வண்ணம் அமுதமாக காதில் வந்து பாயும் நான் ரசித்த,ரசிக்கும் பாடல்களை நீங்களும் கேட்டு மகிழ்ந்து கருத்தும் ஓட்டும் இட்டு விட்டு செல்லுங்களேன்.

எல்.ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் என்றுமே எனக்கு பிடிக்கும்.ஆஹா..கேட்க கேட்க மனதில் உற்சாகமல்லவா பிறக்கும்.

1.துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதோ இனிமை
அத்தனையும் புதுமை



2.எல்.ஆர் ஈஸ்வரி ஹஸ்கி வாய்ஸில் பாடும் விடிவெள்ளி படத்தில் வரும் அற்புதமான பாடல்.எப்பொழுது கேட்டாலும் செய்யும் வேலைகளை ஒத்திப்போட்டு விட்டு லயித்து கேட்டு மகிழும் பாடல் இது.

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன் -
உன் மடிமீதுதான் கண் மூடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடுதான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது


3.எல்.ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் எல்லாமே என்னைக்கவர்ந்தவைதான்.அதிலும் இந்த பாடலை உற்சாகமாக பாடி கேட்பவரையும் உற்ச்சாகத்திற்கு அழைத்து செல்லும் ரகசியம் எல் ஆர் ஈஸ்வரிக்கு கைவந்த கலை.கேளுங்கள்.மனதிற்குள் பூ பூக்கும்.

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
நாடு கண்ட பூங்கொடி
காடு வந்த காரணம் ஒரு முறை எண்ணிப்பார்
தேடி வந்த நாடகம்
கூடி வரும் வேளையில் மறுபடி என்னைப்பார்
வலை போட்டுப் பிடித்தாலும் கிடைக்காதது
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்



4.இதுவும் பி.சுசீலா சோகம் இழையோட இழையோட பாடும் அழகிய பாடல்.

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே


5.பி.சுசீலாவின் கருத்தாழமிக்க பாடல்.குரலில் சோகம் இழையோட பாடும் பொழுது மனதை இறகால் வருடுவது போல் இருக்கின்றது.

நினைக்கத்தெரிந்த மனமே
உனக்கு மறக்கத்தெரியாதா?
பழகத்தெரிந்த உயிரே
உனக்கு விலகத்தெரியாதா


6.இதுவும் பி .சுசீலா பாடிய ஒரு அருமையான பாடல்.பாடலில் குரலை கொஞ்சலாக்கி அற்புதமாக பாடி அசத்துகின்றார்.

செல்லக்கிளியே மெள்ளப்பேசு
தென்றல் காற்றே அள்ளி வீசு


7.பி.சுசீலா பாடிய ஒரு அழகான கானம்.துணையின் பிரிவை ஏக்கத்துடன் எப்படி உருகிப்பாடுகின்றார் பாருங்கள்.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி



8.எஸ் ஜானகி பாடிய மிக பிரபலாமான பாடல் 1970களில் அனைவரின் வாயிலும் முணுமுணுத்த பாடல்.அதில் சுஜாதாவின் எளிமையான நடனமும்,ஜானகியின் தேன் குரலும்,இளையராஜாவின் இசையும் சேர்ந்த ஒரு அற்புதமான கலவை.

மச்சானைப்பார்த்தீங்களா
மலைவாழைத் தோப்புக்குள்ளே,
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்துச்சொல்லு வந்தாரா பார்க்கலையே
அவர் வந்தாரா பார்க்கலையே


9.கன்னிப்பருவத்திலே என்ற படத்தில் எஸ் .ஜானகி உருகி,உருகிப்பாடி நம்மை உருக வைக்கும் பாடல் இது.

பட்டுவண்ண ரோசாவாம்
பார்த்தகண்ணு மூடாதாம்
10.வாணி ஜெயராம் பாடிய எனக்குமட்டுமல்ல பெண்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு பாடல்.இசையும் வாணிஜெயராமின் பாஸந்தி குரலும் சேர்ந்து..ஆஹா..அடடா...எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம்.

மல்லிகை-என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ?
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ?
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்னபப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

இந்த தொடர் பதிவை

மேனகா

கீதாஆச்சல்

ஹுசைனம்மா


மின்மினி.

லக்ஷ்மி அம்மா

தேனம்மை

ராமலக்ஷ்மி

சாருஸ்ரீராஜ்

ஜலீலா

இலா

ஆகியோரை பதிவிட அழைக்கின்றேன்.மேற்கண்டவர்களின் பாடல் ரசனை எப்படி உள்ளது என்று அறிய ஆவல்.விரைவாக பதிவிடுங்கள் நட்புக்களே.

டிஸ்கி: பாடல்வரிகள் கொண்ட சிகப்புவண்ண எழுத்துக்களை கிளிக் செய்து பாடல்களை ரசியுங்கள்.




28 comments:

  1. சூப்பரான பாடல்கள்! அருமை!

    ReplyDelete
  2. WOW! great singers - great selections!

    ReplyDelete
  3. எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கு ஸாதிகாக்கா!நல்ல தொகுப்பு.பாட்டு நம்பர் 6 மட்டும் நான் கேட்டதில்லை,,மற்ற பாடல்களெல்லாமே கேட்டிருக்கேன்.

    ReplyDelete
  4. நான் எவ்வளவு லேட்டாக்குகிறேனோ அவ்வளவுக்கவ்வளவு சரியில்லைன்னே தோனுது..இதில மேக்ஸிமம் பாட்டு நான் செலக்ட் பண்ணி வச்சது .இனி வேறதான் போடனும் போல இருக்கு ..!!

    எல்லா பாட்டுமே அமர்களம் சூப்பர் :-)

    ReplyDelete
  5. அனைத்து பாடல்களுமே அருமை...எனக்கு பிடித்ததும் கூட...

    தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி...

    ReplyDelete
  6. அழைப்பிற்க்கு மிக்க நன்றி அக்கா!! எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள் ,எப்போழுதும் கேட்கதூண்டுபவை..ஆசியாக்காவும் அழைத்திருந்தாங்க,சீக்கிரமே பதிவிடுகிறேன்...

    ReplyDelete
  7. எல்லா பாடல்களும் அருமை சாதிகா அக்கா!!!!

    ReplyDelete
  8. அருமையான செலக்ஷன்..

    ReplyDelete
  9. அருமையான பாடல்கள்

    ReplyDelete
  10. சூப்பரான பாட்டு எல்லாம் நீங்க செலெக்ட் பண்ணிட்டீங்க.. அப்புறம் நாங்க எதைப் போடுறது ஸாதிகா..:))

    ReplyDelete
  11. பாடல்கள் எல்லாமே தரமான தெரிவு. எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ்.ஜானகி அவர்களின் குரல்கள் ரொம்ப அற்புதம்.

    ReplyDelete
  12. பாடல்கள் எல்லாமே தரமான தெரிவு. எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ்.ஜானகி அவர்களின் குரல்கள் ரொம்ப அற்புதம்.

    ReplyDelete
  13. சாதிகா மேடம் தொடர் பதிவுக்கானபாடல்களை எங்கே பதிவு செய்யனும். எனக்குத்தெரியலை சொல்ரீங்களா?

    ReplyDelete
  14. ரொம்ப ரசித்து கேட்ட பாடல்கள்.. அனைத்தும் அருமை.

    ReplyDelete
  15. இனிய கான மழையில் நனைய வைத்துள்ளீர்கள்! எனக்கும் பிடித்த பாடல்களே. அழைத்த அன்புக்கு என் நன்றிகள் ஸாதிகா.

    ReplyDelete
  16. எல்லாமே இனிய பாடல்கள்தான். அதுவும் 'மல்லிகை என் ம‌ன்னன்' பாடல் அது வெளி வந்தபோது அத்தனை பேரையும் மயக்க வைத்தது!

    ReplyDelete
  17. அனைத்துப் பாடல்களுமே அருமை!!

    ReplyDelete
  18. பாடல்களோடு பாடகிகளின் படங்களையும் வெளியிட்டது அழகு.

    ReplyDelete
  19. நல்லா இருக்கு. நானும் எழுதணும் என்னத்தை எழுதுறன்னு தெரியலை

    ReplyDelete
  20. அருமையான பாடல்கள்.அழைப்பினை ஏற்று உடன் அசத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  21. அக்கா, அருமையான பாடல்களின் தொகுப்பு.

    என்னையும் அழைத்திருக்கிறீர்கள். மன்னியுங்கள், முதல் காரணம், எனக்கு மிகவும் பிடித்த, தெரிந்த சில பாடல்களையும் பலரும் எழுதிவிட்(டீ)டார்கள். இவை தவிர்த்த பாடல்களை எழுதுமளவு வேறு பாடல்கள் ஞாபகம் வரவில்லையக்கா. தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

    ReplyDelete
  22. எல்லா பாட்டுமே மனம் மயக்கும் பாடல்கள் , இதோ எழுதி விடுகிறேன்.

    ReplyDelete
  23. அருமையான கானங்கள்
    அபப்டியே மெய்மற்ந்து விட்டது
    என்னை யும் அழைத்து இருக்கீஙக்
    முடிந்த போது எழுதுகிரேஎன்

    ஆனால் பிடித்த பாடல் எல்ல்லொரும் எழுதிவிட்டீர்கல்

    ReplyDelete
  24. எஸ்.கே

    மகி

    சித்ரா

    ஜெய்லானி

    கீதாஆச்சல்

    மேனகா

    கலாநேசன்

    ஆமினா

    அமைதிச்சாரல்

    எல்.கே

    தேனம்மை லக்ஷ்மணன்

    myth-buster

    லக்ஷ்மி

    ஸ்டார்ஜன்

    ராமலக்ஷ்மி

    அஹ்மது இர்ஷாத்

    மனோஅக்கா

    அப்துல்காதர்

    அக்பர்

    வானதி

    ஆசியா

    ஹுசைனம்மா

    சாருஸ்ரீராஜ்

    ஜலீலா

    கருத்திட்ட உங்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்

    ReplyDelete
  25. ஸாதிகாக்கா,நீங்கதானா "ஸ்வீட்'?? நானும் எங்கேயோ பார்த்த பதிவுகளாவே இருக்கேன்னு ஒண்ணொன்ணா பாத்து..கடைசியா கமெண்ட்ஸ்-ஐ க்ளிக் பண்ணி தெரிந்துகிட்டேன்.:) :)

    ReplyDelete
  26. ஸ்வீட் சாப்பிட்டேன் திகட்டவில்லை .
    செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' இது வள்ளுவன் வாக்கு.
    பாடல்வரிகள் கொண்ட சிகப்புவண்ண எழுத்துக்களை கிளிக் செய்து பாடல்களை ரசித்தேன் .
    கிளிக் செய்தால் பாட்டு கேட்க காணொளிக்கு சென்று விடுகின்றது . இரண்டும் ஓரிடத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு . ஆனால் நீங்கள் செய்துள்ளது தனித்துவத்தை தருகின்றது. வாழ்த்துகள் .

    ஸாதிகாக்கா,நீங்கதானா "ஸ்வீட்'!!!??
    டைசியா கமெண்ட்ஸ்-ஐ க்ளிக் பண்ணி தெரிந்துகிட்டேன்.:) :) ??

    "நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
    சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்"

    ஸ்வீட் said... கவிதை வரிகள் நெகிழவைத்து விட்டது
    பெயர் வரிசியினை பார்த்து பிரம்மித்து விட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்!
    இந்த வரிகள் அறியச் செய்து விட்டது கலிமாவை கடைப்பிடித்து வாழ்பவர் என்று. jazaakkallah khairan

    ReplyDelete