Monday, June 7, 2010

அமீரகம் அன்றும் இன்றும் (பாகம்-2)

தொலைநோக்குப்பார்வை என்பது இதுதானோ?
பெண்மனி தொட்டிலில் குழந்தையை தூங்கச்செய்துவிட்டு சமையலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்.
விருந்து தயார்.அருந்துவதற்கு யாரை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றார்?
பயணத்தில் கூடாரம் கட்டி வெளிச்சம்தரும் ஹரிக்கோன் விளக்குகளை சுத்தம்செய்து வெளிச்சத்திற்கு வழிவகுத்துக்கொண்டு இருக்கின்றார்.
ஈச்சமரத்துக்கிடையே அழகிய கொம்புமான் தனிமையில் இனிமை காண்கின்றது.
கட்டுமரங்களுக்கிடையே மீன் மாட்டாதா என்று ஒற்றைக்காலில் தவம் நிற்கும் கொக்கு.
அந்தக்கால அம்மணி பார்க்கும் வேலைகளைப்பாருங்கள்.இந்தக்கால அம்மணிகள் மிஷினை வைத்து வேலை வாங்கிக்கொண்டே மூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்
உலோகத்தயாரிப்பில் சின்சியராக ஈடுபட்டு இன்று உலகப்பார்வையின் உச்சியில் நிற்கும் இக்கால அரேபியர்களின் பாட்டன்,முப்பாட்டனார்கள்.உழைப்பின் உச்சகட்டம்.

அன்று கற்களையும்,மணல்களையும் சுமந்து இன்று கரன்ஸிகளை சுமக்கும் புருஷர்கள்
கடின உழைப்பிற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
முதியவரைக்கூட உழைப்பின் ஆர்வம் விட்டுவைக்கவில்லை.
மீன் தோல்களை உலரவிட்டு பதப்படுப்படும் காட்சி.
கற்றுக்கொடுக்கும் அரபி
கற்றுக்கொள்ளும் அரபிகள்
பெட்ரோலிய தொழில் ஆரம்பித்து விரிவடைந்து கொண்டிருப்பதை சித்தரிக்கும் சிலைஜொலி ஜொலிக்கும் இன்னாள் அமீரகம்.

பாகம் ஒன்றினை இங்கு சென்று பாருங்கள்.

25 comments:

  1. சூப்பர் சூப்பர் ....

    ReplyDelete
  2. படங்களும் கமெண்டும் கலக்கல்

    ReplyDelete
  3. போட்டோக்கள் ரொம்ப அருமை, அரபிகளை பற்றி பதிவு போடுவதா இருந்தால் இங்கிருந்து அபேஸ் பண்ணனும்.

    ReplyDelete
  4. ரொம்ப எதார்த்தமா செய்திருக்காங்க, நல்ல நேர்த்தி

    தொடரட்டும் ...

    ReplyDelete
  5. அரேபியர்களின் வெற்றிக்கு எண்ணை வளம் மற்றும்தான் காரனம் என் நினைத்தேன் இப்போதுதான் புரிகிறது அவர்களது கடின உழைப்பும் காரனம் என்று ... நல்ல பதிவு

    ReplyDelete
  6. கத்தார் சிட்டி சென்டரில் இதே மாதிரியான பழங்காலத்து அரேபியர்களின் வரலாறை பொம்மைகளாக சித்தரித்து இருந்தார்கள்... புகைப்படம் எடுத்திருக்கலாம்.. சான்ஸ் போய்விட்டது.. அடுத்த முறை வந்தால் இதே மாதிரியான பதிவை கண்டிப்பாக இடுவேன்....

    நல்ல பகிர்வு.. அருமைங்க...

    ReplyDelete
  7. அருமையான பகிர்வுங்க ஸாதிகா..

    ReplyDelete
  8. கொம்பு மான் படம் தத்ரூபமா இருக்கு, வளர்ச்சியின் தொடக்கம் கற்றுக்கொள்வதிலிருந்து தொடங்கியிருப்பது நமக்கும் ஒரு பாடமே!!

    ReplyDelete
  9. ஸாதிகா தெளிவான படங்கள்,கமெண்ட்ஸ் சூப்பர்.பாராட்டுக்கள் ,தோழி.

    ReplyDelete
  10. அழகிய கலை வடிவங்கள்.

    படங்களும் கமென்ட்டும் சூப்பர் அக்கா.

    ReplyDelete
  11. அமீரகம் சிறப்பாக முன்னேறியிருக்கிறது என்பதை இந்த அருங்காட்சிகயகம் எடுத்தியம்புகிறது. அருங்காட்சியகத்தை அழகாக போட்டோ எடுத்து தொகுத்து தந்திருக்கும் ஸாதிகா அக்காவுக்கு ஒரு பூங்கொத்து.

    ReplyDelete
  12. அருமையான படங்கள். இதேபோல இணையத்திலும் பார்க்கும் வசதியை ஏற்படுத்தினால் வளைகுடாவில் இல்லாத ஜனங்களும் பார்க்க முடியுமே...அந்த அருங்காட்சியகத்திற்கு வலைதளம் ஏதுமில்லையா??

    ReplyDelete
  13. அருமையான பகிர்வு ஸாதி(கா)..
    மிக பொறுமையா ஒவ்வொரு காட்சியா எடுத்து சிரமப்பட்டு ரெம்ப பயனுள்ள பதிவு கொடுத்ததிற்கு பாராட்டுகள்...

    ReplyDelete
  14. மிகவும் அருமையாக அழகாக போட்டோக்கள் இருக்கின்றது...சூப்பப்ர்...

    ReplyDelete
  15. நல்ல கலேச்சன்ஸ் மேடம்

    ReplyDelete
  16. ஸாதிகா அக்கா, படங்களும் விளக்கமும் “ஓக்கை”... அடிக்காதீங்கோ... சூப்பர் எனச் சொல்ல வந்தேன்.

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ஆனால் இப்படியான வேலைகள் இப்பவும் நம் நாடுகளில் கிராமப்புறங்களில் நடைபெற்றுக்கொண்டுதானே இருக்கு. கல்லுடைத்தல், நெருப்பில் இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்தல் போன்றவை.

    ReplyDelete
  17. போட்டோஸ் எல்லாம் அழகா இருக்கு ஸாதிகா அக்கா! அரபிகள் மற்றும் அமீரகம் பற்றி தெரிந்துகொள்ள ஒரு நல்ல பகிர்வு.

    ReplyDelete
  18. \போட்டோக்கள் ரொம்ப அருமை, அரபிகளை பற்றி பதிவு போடுவதா இருந்தால் இங்கிருந்து அபேஸ் பண்ணனும்\

    repeat! :)

    ReplyDelete
  19. அக்கா எப்படி இருக்கிங்க. சூப்பர படங்கள் + விளக்கங்கள்.அமிரகத்தை பற்றி தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  20. படங்களில் அவர்களின் உழைப்பும், எடுத்த உங்களின் உழைப்பும் தெரிகிறது.

    ReplyDelete
  21. நன்றி ஜெய்லானி

    நன்றி சவுந்தர்

    நன்றி ஜலீலா

    நன்றிஜமால்

    நன்றி ரியாஸ்

    நன்றி அஹ்மது இர்ஷாத்

    நன்றி தேனம்மை லக்ஷ்மணன்

    நன்றி ஷஃபி

    நன்றிமேனகா

    நன்றிஆசியா

    நன்றி சரவணக்குமார்

    நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி அன்னு

    நன்றி சீமான்கனி

    நன்றி கீதாஆச்சல்

    நன்றி சித்ரா

    நன்றி மங்குனி அமைச்சர்

    நன்றி அதிரா

    நன்றி மஹி

    நன்றி நாஸியா

    நன்றி விஜி

    நன்றி அக்பர்

    ReplyDelete
  22. நல்ல போட்டோஸ்! எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஸ்னேகிதி!

    ReplyDelete
  23. நன்றி தோழி செல்வி.

    ReplyDelete